Monday, November 26, 2012

பிறந்தநாள் வாழ்த்து

ஆண்டுக்கு ஒருமுறை அதுவாய் வந்துபோகிறது
அதற்கு ஏன் உனக்கு வாழ்த்து?
அயராது உன்னை பெற்றெடுத்து வளர்த்த
பெற்றோருக்கு சொல்வேன்
உன் பிறந்தநாள் வாழ்த்து!

Tuesday, November 13, 2012

விலங்குகள் கொண்டாடும் தீபாவளி


ஒருவன் மிருகத்தனமானவன் என்று
தர்க்கம் பேசினாலும்
அவன் மரணத்தை கொண்டாடும்போது
நமக்கும் மிருகத்தனம் ஏறவில்லையா?

உணவுக்காக கொன்றாலும் நன்றி சொல்லியே கொல்வோம்
ஆதிகாலம் முதல் 'Avataar' காலம் வரை
ஆனால் இன்றோ
செத்தவனை கொண்டாட ஊரெல்லாம் உற்சாகம்

குடும்பத்தோடு கொண்டாட ஆண்டுக்கொரு அத்தமம்
வீட்டுச்சூழல் மேம்பட சுற்றுச்சூழல் படுகொலை
செத்தவனும் சாம்பலானான் கொன்றவனும் கடவுளானான்
கண்கட்டி வித்தையாய் காரணம்சொல்லி கபளீகரம்

விளக்கறியா வெட்டில்பூச்சியாய் விலங்குகள் விழிக்க
பட்டாசு ஒலியில் பயந்தோடிய நாய்களும்
மாசுற்ற காற்றால் மயங்கிய மாடுகளும்
பறவைகளும் பிறஉயிர்களும் கடவுளிடம் மன்றாடின

காலம் கனிய கடவுளும் காத்திருக்கிறார் போலும்

அன்று
நாமும் அதே வெட்டில்பூச்சியாய் விழிப்போம்
பூமித்தாய் பூகம்ப bomb வெடிப்பாள்
கடல்தாய் பேரலை புஸ்பானம் விடுவாள்
மின்னல்கள் மத்தாப்பாய் மிளிரும்
வானத்திலிருந்து asteroid ராக்கெட்டுகள் பொழியும்

அப்போது
செத்தாண்டா மனுஷன் என்று
விலங்குகள் கொண்டாடும் தீபாவளி

Friday, November 9, 2012

கிறுக்கல்கள்

1
"கொடுக்கற தெய்வம் கூரைய பிச்சிட்டு கொ.."
முடிப்பதற்குள் மழை கொட்ட
கூடையை தலையில் கவிழ்த்துக்கொண்டு
குடிசையுள் குடைபிடித்தால் பூக்காரி

2
ஆங்கிலம் கலக்காமல் நான்கு வரி எழுதினேன்
அழகான கவிதை என்று retweet செய்தான்
தமிழ் நண்பன்
3
பணம் இருப்பவர்களுக்கு தீபாவளி
பணம் இல்லாதவர்களுக்கு 'Deep'ஆ வலி
  4
கூரை ஏறி கோழி பிடிக்க மறுத்தவன்
கோபுரம் ஏறி கும்பாபிஷேகம் செய்தானாம் 
5
காலம் கனியுமென காத்திருக்காதே
எல்லாக் காய்களும் கனிப்பதில்லை
சில கருகிவிடுகின்றன
சில பிறர் தோட்டத்திற்கு விதைகளாகின்றன
 6
நதிகளை தேசிய மயமாக்காததின் விளைவு
தேசிய நெடுஞ்சாலைகள் நதி போல் காட்சியளிக்கின்றன

Saturday, November 3, 2012

மனிதநேயம்

நேற்று மாலை நண்பரோடு பயணித்திருந்தேன்
time passக்கு நாட்டுநடப்பும் நீளம் புயலும்
'என்ன boss சென்னைக்கு வெறும் காத்து தான் வந்துச்சு மழையே வரல' என்றேன்
'உங்களையும் என்னையும் போல மனுஷங்க இருக்குறப்போ எப்படி arun மழை வரும்' என்றார் நக்கலாக.

சட்டென்று brake அடித்து வண்டியின் வேகத்தை குறைத்து ஓட்டினார்
'road freeயா தானே இருக்கு.. எதுக்கு speed குறைச்சீங்க' என்றேன்
'இல்ல இங்க சேரும் சகதியுமா இருக்கு.. வேகமா போனா நடந்து போறவங்க மேல சேர் அடிச்சிடும்' என்றார்.

புன்னகைத்து ஜன்னல் வெளியே பார்த்தேன்
ஆனந்ததாண்டவம் ஆட மழைமேகங்கள் மின்னலோடு ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தன.

Monday, October 15, 2012

ஏக்கம்

என்னால் நம்ப முடியவில்லை

அவள் இங்கு இல்லை 


என்னை இருட்டினில் தள்ளினார் போல் உள்ளது
AC போட்டிருந்தும் உடல் வியர்துள்ளது

ஒருவர் இருக்கையில் அவர் அருமை புரிவதில்லை 
அவளுக்காக இப்படி ஏங்குவேன் என்று நினைத்ததில்லை
அவளை திரும்ப அழைக்கத் நினைத்தேன்
கைபேசியில் எண்களை அழுத்தினேன்...
"Hello...எப்போ sir Current வரும்?"

Friday, October 12, 2012

குழாய்

இன்றும் தெருவில் குழாய்அடி சண்டை
ஒருவழியாக எல்லோரும் குடிநீர் பிடித்து செல்ல
தெரு அமைதியானது
குழாய் மட்டும் அழுது கொண்டிருந்தது

Tuesday, October 9, 2012

காலை வாரிய calculation; கால் கொடுத்த கர்ணன்


திங்கள் காலையில் டிங் டாங் என்று மணி அடிக்க
இனிதே துவங்கியது இந்த வாரம்
bike  எடுத்துக்கொண்டு பந்தாவாய் கிளம்பினேன் officeகு
top  gear தொட்டபிறகு bottom heartல் ஒரு லப் டப்
speedometer மேல்நோக்கி பறக்க fuel gauge கீழ்நோக்கி நாணியிருந்தது

அலுவலகத்தில் இருந்து அலைபேசி நச்சரிக்க
parallax error என்று physicsம் சமாதானம் சொல்ல
Ignore செய்தேன் Indian Oilஐ
தெம்பாக முறிக்கினேன் throttleஐ

விளைவு...
மண் சுமந்த மாட்டுவண்டிக்கு தோதாய்
மூச்சிறைத்து நின்றது என் வண்டி

திங்கள் என்றாலும் ஞாயிறு விட்ட பாடில்லை
ACயில் இருந்த உடம்புக்கு வெயில் easyயாக இல்லை
வராத காவிரியாய் வியர்வை வழிந்தோடியது

என்னை அவசர படுத்திய computer professionஐயும்
எனக்கு இல்லாமல் போன common senseஐயும்
சபித்துக்கொண்டே தள்ளினேன் சுடும்வெயிலில் வண்டியை

கண் இருட்டிக்கொண்டு கபாலம் கலங்கிய போது
கானல் நீராய் தோன்றினார் கர்ணனாய் அந்த உருவம்

நிலைமை அறிந்து நலம் கருதி உதவினார் அந்த அனானி
காலால் வண்டியை tow செய்து கறை சேர்த்தார்
கைமாறு கருதாமல் bye சொல்லி புறப்பட்டார்

ரொம்ப Thanks Boss என்று கை அசைத்தேன்
அதற்குள் மறைந்து விட்டது அவரது Hero Passion

In this age of techno gizmo
With scant regard for enviro
And compassion dropping to zero
This bro, for me, is an unsung hero

Saturday, August 11, 2012

வருடல்

Power  cut டிலும் புலவன் ஆகலாம்
கொசுக்கடியிலும் கவிதை எழுதலாம்
மயிலிறகின்  வருடலாய்
இளை(யராஜா)யின் இசையிருந்தால்!!

- அருண் 

Sunday, April 29, 2012

கூரை குறை தீர்த்த தலைவா வாழ்க!

சாலையோர சந்திப்பிலிருந்து
கம்பீரமாய் கர்ஜித்தார் தலைவர்
நகரெங்கும் நடனமாடின
பளபளக்கும் பதாகைகள் (banner)

பதாகைகளின் ஆக்கிரமிப்பில்
பாதசாரிகள் அல்லோலப்பட
புலம்பியபடியே நடந்தேன்
பாலத்தின் மேலே
 
வற்றிய ஆறும் சுருங்கிய வயிறும்
சாக்கடை சேறுமாய் குப்பம் மிதக்க
கூரைக்கு பதில் குறைதீர்த்தபடி புன்னகைத்தார்

 வாழ்த்தும் கையுமாய் தலைவர்
 பழைய பதாகையாய்

- அருண்

பொருள் விளக்கம் 
 
அத ஏ மாமு கேக்குற
நேத்து பஜார் பக்கம் போனேனா
ஏதோ கட்சி கூட்டம்னு ஒரே போஸ்டர் பா

தினுசு தினுசா பேன்னர் அடிசிருந்தானுங்க
ரோடெல்லாம் பேன்னர் அடிச்சு நடக்க கூட எடம் இல்லாம ஒரே பேஜாரா போச்சு
இந்த பேமானிங்க பேன்னர் அடிகலைன்னு எவன் அழுதான்னு பொலம்பினே சேரி பக்கம் போனேனா

அங்க நம்ம குப்பத்து ஆளுங்க குட்சைல மழை தண்ணி ஒழுவாம இருக்க
இந்த பழைய பேன்னர்லாம் கூர மேல போட்டிருந்தாங்க மாமு

அப்போதான் விவேக் சொன்னது மனசுக்கு வந்திச்சு

'இந்த அரசியல் கட்சிங்க மாநாடு நடத்துரதுக்கும் ஒரு பயன் இருக்கத்தான் செய்யுது'

Tuesday, March 20, 2012

குருவி


வீட்டுத் தின்னையில் விளையாடிய குருவி
வீடே இல்லாமல் திரியுது எங்கோ!

ஊர் சுற்றி உறவாடிய குருவி
ஊன் இன்றி கருகுது எங்கோ!

கூரைகளில் கூடுகட்டி குடிபுகுந்த குருவி
கூரையின்றி தவிக்குது எங்கோ!

ஆறறிவு கொண்ட அரக்கர்கள் நாம்
அமைதி கொள்வது என்றோ?

Saturday, January 14, 2012

பொங்கலோ பொங்கல்


கரும்பு இனிக்க
மஞ்சள் மணக்க
பொங்கல் பொங்க
சுற்றம் வாழ்த்த
நெஞ்சம் நெகிழ
தரணி தழைத்திட
கதிரவனை வணங்கி
தமிழர் திருநாளை போற்றுவோம்
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!