ஒருவன் மிருகத்தனமானவன் என்று
தர்க்கம் பேசினாலும்
அவன் மரணத்தை கொண்டாடும்போது
நமக்கும் மிருகத்தனம் ஏறவில்லையா?
உணவுக்காக கொன்றாலும் நன்றி சொல்லியே கொல்வோம்
ஆதிகாலம் முதல் 'Avataar' காலம் வரை
ஆனால் இன்றோ
செத்தவனை கொண்டாட ஊரெல்லாம் உற்சாகம்
குடும்பத்தோடு கொண்டாட ஆண்டுக்கொரு அத்தமம்
வீட்டுச்சூழல் மேம்பட சுற்றுச்சூழல் படுகொலை
செத்தவனும் சாம்பலானான் கொன்றவனும் கடவுளானான்
கண்கட்டி வித்தையாய் காரணம்சொல்லி கபளீகரம்
விளக்கறியா வெட்டில்பூச்சியாய் விலங்குகள் விழிக்க
பட்டாசு ஒலியில் பயந்தோடிய நாய்களும்
மாசுற்ற காற்றால் மயங்கிய மாடுகளும்
பறவைகளும் பிறஉயிர்களும் கடவுளிடம் மன்றாடின
காலம் கனிய கடவுளும் காத்திருக்கிறார் போலும்
அன்று
நாமும் அதே வெட்டில்பூச்சியாய் விழிப்போம்
பூமித்தாய் பூகம்ப bomb வெடிப்பாள்
கடல்தாய் பேரலை புஸ்பானம் விடுவாள்
மின்னல்கள் மத்தாப்பாய் மிளிரும்
வானத்திலிருந்து asteroid ராக்கெட்டுகள் பொழியும்
அப்போது
செத்தாண்டா மனுஷன் என்று
விலங்குகள் கொண்டாடும் தீபாவளி
No comments:
Post a Comment