திங்கள் காலையில் டிங் டாங் என்று மணி அடிக்க
இனிதே துவங்கியது இந்த வாரம்
bike எடுத்துக்கொண்டு பந்தாவாய் கிளம்பினேன் officeகு
top gear தொட்டபிறகு bottom heartல் ஒரு லப் டப்
speedometer மேல்நோக்கி பறக்க fuel gauge கீழ்நோக்கி நாணியிருந்தது
அலுவலகத்தில் இருந்து அலைபேசி நச்சரிக்க
parallax error என்று physicsம் சமாதானம் சொல்ல
Ignore செய்தேன் Indian Oilஐ
தெம்பாக முறிக்கினேன் throttleஐ
விளைவு...
மண் சுமந்த மாட்டுவண்டிக்கு தோதாய்
மூச்சிறைத்து நின்றது என் வண்டி
திங்கள் என்றாலும் ஞாயிறு விட்ட பாடில்லை
ACயில் இருந்த உடம்புக்கு வெயில் easyயாக இல்லை
வராத காவிரியாய் வியர்வை வழிந்தோடியது
என்னை அவசர படுத்திய computer professionஐயும்
எனக்கு இல்லாமல் போன common senseஐயும்
சபித்துக்கொண்டே தள்ளினேன் சுடு
கண் இருட்டிக்கொண்டு கபாலம் கலங்கிய போது
கானல் நீராய் தோன்றினார் கர்ணனாய் அந்த உருவம்
நிலைமை அறிந்து நலம் கருதி உதவினார் அந்த அனானி
காலால் வண்டியை tow செய்து கறை சேர்த்தார்
கைமாறு கருதாமல் bye சொல்லி புறப்பட்டார்
ரொம்ப Thanks Boss என்று கை அசைத்தேன்
அதற்குள் மறைந்து விட்டது அவரது Hero Passion
In this age of techno gizmo
With scant regard for enviro
And compassion dropping to zero
This bro, for me, is an unsung hero
No comments:
Post a Comment