Sunday, July 3, 2011

மொழி பிரச்சனையில் முழி பிதுங்குதப்பா!!

'இந்தி மொழியை கட்டாய பாடமாக்க வேண்டுமா' என்பதை பற்றி நண்பர் ஒருவர் FB யில் ஒரு பதிப்பு இட்டிருந்தார்.

அந்த எண்ணங்களை வேறு ஒரு கோணலில் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.


'தமிழர்களுக்கு தமிழில் ஒழுங்காக பேச, எழுத தெரிகிறதா?' என்ற கேள்விகள் எழும் இந்த கால கட்டத்தில், வேறு ஒரு மொழியை கட்டாய பாடமாக்க வேண்டுமா என்ற கேள்விகளும் எழுவது விந்தையாக உள்ளது. எரிகிற வீட்டில் கொள்ளையும் அடித்துவிட்டு எண்ணையும் ஊற்றுகிறார்களா!?!

' நான் டில்லி, குர்காவ்னில்  இருக்கிறேன்... எனக்கு இந்தி தெரியாமல் சிரமமாய் இருக்கிறது... schoolலையே இந்தி படிச்சிருந்தா usefulல இருந்திருக்கும்' என்று தன் தேவையை மட்டும் பார்க்கும் myopic friends தங்கள் நேரத்தை வீண்செய்யாமல் பின்குறிப்பு 3க்கு செல்லவும். மொழி பிரச்னையை ஒரு சமுதாய வரலாற்று கண்ணோட்டத்துடன் காணும் பதிப்பே இது!!

இந்தியாவின் சிறப்பு அதன் வேற்றுமையே! ஒவ்வொரு இந்தியனுக்கும் பேச்சில், வாழ்வில், வழிபாட்டில் சுயஉரிமை என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் விடுதலை பெற்ற நாடு இது! இந்த விடுதலையை அந்நியர்களிடம் இருந்து நாம் பெற்றுவிட்டோம்; நம் சக இந்தியர்களிடம் இருந்து பெற்றுவிட்டோமா என்பது கேள்விக்குறியே!

மொழியும் சமுதாயமும் பின்னிப்பிணைந்தது. தனி மனிதனுக்கு மொழி தேவை இல்லை. சமுதாயம் உருவாகும் போதே மொழியின் தேவை வருகிறது. சமுதாயத்துக்கு ஏற்ப மொழி மாறும்; மொழிக்கேற்ப சமுதாயம் மாறும்; இது இயல்பு!

இந்திய நாடு பல கலாச்சாரங்களின் கலவை. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு கலாச்சாரத்தின் வெளிப்பாடு. இந்தியர் ஒவ்வொருவரும் அந்தந்த கலாச்சாரத்தை மதிக்கின்றோம்; அதே நேரத்தில் தன் சொந்த கலாச்சாரத்தை போற்றி காக்கவும் கடமை பட்டுள்ளோம். (ஊர்ல இருக்குற எல்லா அம்மாவும் நல்ல அம்மாதான்; ஆனா எனக்கு என் அம்மா தான் the best!!).

ஒரு கலாச்சாரத்தின் வெளிப்பாடு - மொழி , மதம், பண். இந்தியா என்னும் பாற்கடலை நாம் கலாச்சாரம் என்னும் மண்டர மத்தையும் நம் சுயதேவைகள் என்ற வாசுகி பாம்பையும் வைத்து கடையும்போது நாட்டு ஒற்றுமை என்ற அமிழ்தமும் வருகிறது; கலாச்சார பாதிப்பு (சிதைவு) என்ற நஞ்சும் வருகிறது. இதில் நஞ்சை கையாள எந்த சிவபெருமானும் நம்மில் இல்லாதததுதான் குறை!!

உவமைகளை விட்டுவிட்டு நிதர்சனத்துக்கு வருவோம்!

சமுதாயங்கள் ஒன்றோடொன்று உரையாடும் போதும் பரிமாறும் போதும் ஒரு பொது மொழி தேவை படுகிறது. இதனால்தான் இந்திய அரசு அரசாங்க மொழியாக இந்தியையும் ஆங்கிலத்தையும் அறிவித்தது. (இந்தியாவிற்கு தேசிய மொழி கிடையாது. நம்பாதவர்கள் இந்த இணைப்பிற்கு செல்லவும்). அறிவிக்கப்பட்ட கால கட்டம் - 1950, 60. அன்றைய சூழலில் இந்தியாவில் பெரும்பான்மையான தொழில்கள், வேலை வாய்புகள் அரசாங்கத்திடமே இருந்தது. அனைத்து தரப்பினரும் இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும்; அரசாங்க வேலையில் இந்தி மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற அரசாணை தென்னகத்தில் புரட்சியை ஏற்படுத்தியது. இந்த அரசாணை இந்தி தெரியாத தென்னவர்களுக்கு வேலைவாய்ப்பில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எண்ணம் நடுவண் அரசுக்கு தெரியாதோ என்னவோ?! மேலும் ஒரு மொழியை கட்டாயமாக்குவது அந்த மொழி பேசாதவர்களின் அடிப்படை உரிமை மீறல் என்பது உணரவில்லையோ?! ஒரே மொழி பேசா விட்டால் இந்தியா சிதைந்து விடும் என்று நினைத்தவர்கள் மொழியை கட்டாயம் ஆக்கினால்தான் அப்படி ஆகும் என்று பின்பு புரிந்துகொண்டனர். விளைவு - ஆங்கிலமும் அரசு மொழியாக தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.

ஆங்கிலத்தை தொடர்ந்து பயன்படுத்தியதன் பலன் இப்போது நாம் அனைவரும் காண்கிறோம். உலகில் ஆங்கிலம் தெரிந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலை. உற்பத்தி துறையில் அபார வளர்ச்சி கண்ட சீனா தகவல் தொழில்நுட்பத்தில் (IT) இந்தியாவை வெல்ல முடியாததற்கு காரணம் அங்கே ஆங்கிலம் இல்லை. IT, BPO துறைகளில் நாம் கண்ட வளர்ச்சி எவ்வளவு! இதற்கு முழு இந்தியாவும் தமிழகத்துக்கு கடமை பட்டுள்ளது. நாம் நம் மொழியின் மேல் பற்று உள்ளவர்கள் தான். அதே நேரத்தில் நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக்கொள்ள தெரிந்தவர்களே - அதனால்தான் தமிழோடு உலக பொது மொழியாம் ஆங்கிலமும் கற்றோம்.

இந்தி கற்காதளால் பல வாய்ப்புகளை இழந்தோம் என்று கூறுவது பொய்யான வாதம்; இந்தியாவில் அரசியல் தவிர வேறு எந்த தொழிலுக்கும் மொழி தடை இல்லை. வேலை தேடி தென்இந்தியாவுக்கு வரும் வடஇந்தியர்களே அதிகம். அவர்களின் புலம்பலாகத்தான் இதை பார்கிறேன். வாழ்நாள்முழுக்க இந்தி மற்றும் அதன் சகோதர மொழிகளை மட்டுமே பேசியவர்களுக்கு திராவிட மொழிகள் அந்நிய மொழிகளாகத்தான் தெரியும். அவர்களின் வார்த்தைகளே - இந்தி கற்காதளால் பல வாய்ப்புகளை இழந்தோம். ஆம், உண்மை தான்! வாய்ப்பை இழந்தது சென்னை தி நகரில்  துணிமணி கடை வைக்க நினைத்த சேட்டு. காரணம் மக்களுக்கு இந்தி தெரியவில்லையே!! அதனால் அவர் வாய்ப்பை இழந்தார்! அதற்கு நாம் வருந்த தேவை இல்லை!! ஊரோடு ஒத்தி வாழ தெரியாதவர்களுக்கு பொருளாதாரம் தெரியாது. உலகமயமாக்கத்தால் இன்றைய கால கட்டத்தில் அரசு துறைகளில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை மிக குறைவு. பெரும்பாலும் வேலைகள் தனியார் துறையிலேயே உள்ளது. இங்கே பேசப்படும் மொழி ஆங்கிலம்.

எனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை. வட மாநிலத்தவருக்கு ஆங்கிலம் தெரியவே தெரியாதா?? எங்க ஊரு ஆப்ப காரம்மா கூட '2 aapam 10 rupees. change no. 10 rupee give' னு இங்கிலீஷ் பேசும். இந்தியாவில் இந்திய மொழியே பேச வேண்டும். வெள்ளையர்களை விரட்டி விட்டுட்டு ஆங்கிலம் மட்டும் எதற்கு என்று விதண்டாவாதம் பேசக்கூடாது (இந்தியில் 10% மட்டுமே சமக்ரிதம், மீதி 90% பெர்சிய மற்றும் உருது மொழி என்ற வாதம் வேறொரு கதை). உடுப்பது மேற்கத்திய உடை. உண்பது மேற்கத்திய உணவு. வேலை செய்வதும் மேற்கத்திய நாட்டின் இந்திய கிளை. இது உலகமயமாகத்தின் பிரதிபலிப்பு. மொழியும் அப்படியே.

ஊரோடு ஒத்து வாழ் - இது பழமொழி மட்டும் இல்லை. புது மொழியும் கூட.

பூனாவில் வேலை பார்த்தால் மராட்டியில் பேசு!
டில்லியில் வேலை பார்த்தால் இந்தி பேசு!
கொல்கத்தாவில் இருந்தால் பெங்காலி கற்றுக்கொள்!
சென்னையில் இருந்தால் தமிழ் கற்றுக்கொள்!

வீட்டில் மட்டும் உன் தாய்மொழி பேசு!

- அருண்


பின்குறிப்பு 1: இந்த பதிப்பை ஆங்கிலத்தில் இடலாம் என்றே தோன்றியது. முதலில் தமிழை தன் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்காமல் இருக்கும் தமிழர்கள் இதை படிக்கட்டும் என்றே இந்த இடுகையை தமிழில் பதித்தேன். மதுரையில் கல்வி அறிவே இல்லாத தமிழர்களையும் பார்கிறேன்; சென்னையில் CBSEஇல் ஆங்கிலம் இந்தி மட்டுமே படிக்கும் மாணவர்களையும் பார்க்கிறேன்.  'Tamil movies are sick; Bollywood is the best!' என்று பந்தா பண்ணும் தமிழ் கோமாளிகளையும் பார்க்கிறேன். எப்பொழுதும் இக்கரைக்கு அக்கறை பச்சையாகத்தான் தெரியும். ஒருவர் இருக்கும் போது அவரின் பெருமை தெரியாது. தமிழுக்கு அந்த நிலை வந்துவிடுமோ என்று ஆதங்கப்படும் தமிழர்கள் குறைந்தது தன் பிள்ளைகளுடனாவது வீட்டில் தமிழில் பேசுங்கள்!

பின்குறிப்பு 2 : இந்தியாவே ஒரு குப்பை ஊரு. இங்கே இருந்தா என் life spoil ஆயிடும் என்று கூறிக்கொண்டு green cardகாக எங்கும் தோழர்களுக்கு இந்த பதிப்பு ஒரு நகைப்பாய், 'obsolete crap' ஆகா தெரிந்தால் கூட வியப்பதிர்கில்லை.

பின்குறிப்பு 3: 'Schoolலையே இந்தி படிச்சிருந்தா usefulல இருந்திருக்கும்' என்று தன் தேவையை மட்டும் பார்க்கும் myopic friendsகளுக்கு - "ஏன் boss... .Net, Java லாம் நாம என்ன schoolலயா படிச்சோம்? 1 மாதம் class போனா நீங்களும் இந்தி பேசலாம். சமஜ்கயா?!?!"

7 comments:

  1. அருண்.. நல்ல கட்டுரை... நல்ல கருத்து... ஒரு சின்ன திருத்தம்... இந்திய தேசத்திற்கு ஆட்சி மொழி என்று ஒன்று கிடையாது.. அலுவல் மொழி தான் உண்டு... மத்திய அரசின் அலுவல் மொழி ஹிந்தியும் ஆங்கிலமும்..மற்றபடி ஆட்சி மொழி மாநில அரசாங்கங்கள் தீர்மானிக்க வேண்டியது...

    ReplyDelete
  2. பிரதீப் - பின்ஊட்டத்திற்கு நன்றி! அரசியல் சாசனத்தின் மொழி சம்பந்தப்பட்ட பகுதிகளை பார்த்தேன். நீங்கள் கூறுவது உண்மை தான். கட்டுரையை மாற்றி எழுதியுள்ளேன். நன்றி!
    மேலும் இது தொடர்பான செய்தி ஒன்று இங்கே -
    http://timesofindia.indiatimes.com/india/Theres-no-national-language-in-India-Gujarat-High-Court/articleshow/5496231.cms

    ReplyDelete
  3. அருண்... தங்களுடைய கருத்து என்னை மெய் சிலிர்கவைதுவிட்டது... அருமையான கருத்து...:) ஆங்கிலம் பேசினால் தான் கௌரவம் என்று வெத்து 'சீன்' போடுகிறவர்கள் தான் தமிழ் மொழியை அழிக்க பார்கின்றனர்...ஹிந்தி தெரிந்தால் ஒரு நன்மையே தவிர பெருமை ஒன்றும் இல்லை...

    ReplyDelete
  4. Boss..nanum hindi padichaen..but pesa thiriyathu..ezutha padikae teriyum..adae vachi mumbai lae ootinaen..but 1yr ana pram thana pesa kathukutaen...but ezuthae padikae terinjathu usefulla irundichu....

    ipo blore laiyum hindi vachi samalikraen...north side ponalum use fulla iruku..

    ReplyDelete
  5. anonyous - super boss..idathukku ethamadhiri neenga maariyirukeenga... thevaikuu etramadhiri mozhiya kathukanumngarthukku neenga oru example.. vaazhthugal!

    ReplyDelete
  6. miga sirapaana oru katturai.. today only i have seen ur blog.. share it in FB. it will be useful for many people

    ReplyDelete