Sunday, May 8, 2011

படித்ததில் பிடித்தது - அன்னையர் தினம்

இன்று அன்னையர் தினம் என்பதால் தாய்மை பற்றி சில சுவையான செய்திகள், கட்டுரைகள் படித்தேன்.

தமிழ் மொழியில் பெயர்கள் எவ்வாறு அறிவியல் பூர்வமாக அமைகின்றன என்று முன்பொரு பதிப்பில் கண்டோம். இதை மேலும் பறைசாற்ற ஒரு சுவையான செய்தி இங்கே...

அம்மா என்பவள் நமக்கு உயிர் கொடுத்தவள் என்பதால் முதல் எழுத்தாக 'அ' என்னும் உயிர் எழுத்தையும், நம்மை சுமந்து உடல் (மெய்) கொடுத்ததால் இரண்டாம் எழுத்தாக 'ம்' என்ற மெய் எழுத்தும் நமக்கு உடல் உயிரோடு உணர்வையும் சேர்த்து வளர்த்தால் மூன்றாம் எழுத்தாக 'மா' என்ற உயிர்மெய் எழுத்தும் சேர 'அம்மா' என்ற பெயர் சொல் உருவானது. இதே போல தான் அப்பா, அண்ணா, அக்கா என்ற பல முக்கிய உறவுகளும் பெயர் பெற்றன.

அம்மா மென்மையானவள் என்பதால் 'ம்' என்ற மெல்லினம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அப்பா  கண்டிப்பானவர் (வன்மை குணம்)என்பதால் 'ப்' என்ற வல்லினம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது தமிழ் மொழியின் தொன்மைக்கும் சிறப்புக்கும் அறிவியல்சார் தன்மைக்கும் மேலும் ஒரு சான்றாக அமைந்துள்ளதில் வியப்பு இல்லை!

நன்றி!
அருண்

No comments:

Post a Comment