'தமிழின் வியத்தகு மாண்புகளும், அதன் வளர்ச்சித் திசைவழியும்' என்ற கட்டுரையை வளையத்தில் படித்தேன். அக்கட்டுரையில் இருந்த ஒரு சுவையான கூறு இங்கே!
தமிழ் எழுத்துகளை உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் என்று அடிப்படையாக பிரிக்கலாம் (உயிர்மெய் எழுத்துகள் இவற்றின் சேர்க்கையே)
'அ' முதல் 'ஔ' வரையிலான எழுத்துகளை நாம் உச்சரிக்கும்போது உதடுகள் ஒட்டாமல், வாயின் மேலண்ணத்தை (upper palate) நாக்கு எங்கும் தொடாமல், காற்றுக் குழாயை அல்லது உதடுகளைக் குறுக்கியோ, விரித்தோ காற்றை ஒழுங்குபடுத்தி ஒலிக்கின்றோம். உயிருக்கு முதன்மையானது காற்றுதானே! எனவே, காற்றை மட்டும் பயன்படுத்தி உருவாக்கும் எழுத்துகள் உயிரெழுத்துகள் எனப்படுகின்றன.
'க்','ங்','ச்' முதல் 'ன்' வரையான எழுத்துகளை உச்சரிக்கும்போது நாவானது வாயின் மேலண்ணத்தைத் தொட்டோ அல்லது உதடுகள் ஒட்டியோ ஒலிக்க வேண்டியுள்ளது. அதாவது, காற்றைவிட உடலின் (மெய்யின்) பங்கே அதிகம். அவை மெய்யெழுத்துகள் எனப்படுகின்றன.
தமிழ் மொழியின் சிறப்பை கண்டீர்களா தோழர்களே! பெயர்சூடுதலில்கூட என்னவொரு அறிவியல் தன்மை!! நமது மொழிக்கு இது போன்று பல சிறப்புகள் உண்டு. இவற்றை கற்று நிகழ்கால தேவைகேற்ப நம் மொழியை வளர்ப்பது நம் ஒவ்வொருவரின் கனவாகவும் கடமையாகவும் இருத்தல் வேண்டும்.
பின் குறி: மூல கட்டுரையை படிக்க இங்கே சொடுக்கவும்
நன்றி!
அருண்

No comments:
Post a Comment